தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பணியில் இருக்கும் போது எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு சக ஊழியர்களிடமிருந்து நிதி திரட்டி அதனை வணங்கும் முறை தற்போது வழக்கத்தில் இருந்து வரும் நிலையில் இந்த நடைமுறை சீராக இல்லாத காரணத்தால் இதற்காக தனியாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் 30 சங்கத்தில் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியின்போது உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேசமயம் இயற்கை மரணம் அல்லது ஏதாவது ஒரு நோயால் மரணம் அடைந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.