தமிழகத்தில் நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை தேர்ந்தெடுக்கும் போது தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளில் கட்டணம் மிக குறைவாகத்தான் உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் அரசை விரைவு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். என் நிலையில் தமிழக அரசை விரைவு போக்குவரத்து கழகம் பயணிகளை கவரும் வகையில் சமீபத்தில் 50 சதவீதம் கட்டண சலுகை திட்டத்தை அறிமுகம் செய்தது.

அண்மையில் பேருந்து இருக்கைகள் சுத்தமாக இல்லை என்ற பயணிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ஆய்வு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதனை பராமரிக்க ஏதுவாக சீட்டுகளில் துணி கவர்களுக்கு பதிலாக ரெக்சின் கவர்களை மாற்றுவதற்கு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் இந்த கவர் மாற்றும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் அனைத்து பேருந்துகளிலும் அவர்கள் மாற்றப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.