தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலனி மற்றும் ஷூ வழங்க பாத அளவீடுகளை கணக்கிடும் பணியில் தற்போது இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் பாத அளவுகளை கணக்கிட்டு அதற்காக உள்ள செயலியில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்த பணியை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு மாணவர் ஒருவருக்கு இரண்டு ரூபாய் வீதம் மூக்க தொகை வழங்கப்பட உள்ளதாகவும் பணிகள் விரைவில் முடிவடைந்து மாணவர்கள் அனைவருக்கும் காலணிகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.