
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை வெங்கடாசலம் தற்போது காலமானார். இறையன்புவின் தந்தை சேலம் சூரமங்கலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் இன்று வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருக்கு 90 வயது ஆகிறது.
இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒரு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திரு வெங்கடாசலம் சாமானிய பின்னணியில் இருந்து தன்னுடைய உழைப்பால் இரு மகன்களையும் ஆட்சி பணியாளர்கள் ஆக்கியவர்.
தன்னுடைய பிள்ளைகளுக்கு தூய தமிழ் பெயர் சூட்டி தமிழ் பற்றையும் அனைவருக்கும் வெளிப்படுத்தியவர். மேலும் இவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.