பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் நடிகர் தனுஷின் முதல் ஹிந்தி படத்தில் ஜோடியாக நடித்தவர். இவர் தற்போது ஒரு ஹேர் கட் செய்யும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது தன்னுடைய 12 அங்குலம் முடியை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கியுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு வாயு என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பிறகு அவர் படத்தில் நடிக்காமல் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் கர்ப்பத்திற்கு பிறகு கேமரா முன் நிற்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். புதிய படத்தில் நடிப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)