கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுரேஷ் குமார். இவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் பார்வையை இழந்து வந்துள்ளார். ஆனால் பார்வையை இழந்தும் வீட்டில் இருந்து மின்சாதனங்களை பழுது பார்த்து ள்ளார். இதனை அடுத்து இவருடைய ஆர்வத்தை அறிந்த உறவினர்கள் அவரை எலக்ட்ரிக் கடை ஒன்றை வேலைக்கு சேர்த்து விட்டனர். அங்கு பணிக்கு சேர்ந்த சுரேஷ்குமார் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களை வாங்கி எழுதுவது கடையில் யாரும் இல்லாத போது பார்த்துக்கொள்வது என சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார்.

அப்போது அவருடைய ஆர்வத்தை பார்த்த கடை உரிமையாளர் அவருக்கு சின்ன சின்ன பணிகளை கற்றுக் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கவனம் செலுத்தி மின்சார பொருட்களை சரி செய்ய பழகி வந்த சுரேஷ்குமார் ஒரு கட்டத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாஷிங் மெஷின், குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்து வகையான மின்சாதன பொருட்களையும் பழுது பார்க்கும் பணியை தொடங்கி இருக்கிறார்.

இந்த வருமானத்தில் வீட்டு வாடகை உணவு ஆகியவற்றை யாருடைய உதவியும் இல்லாமல் தானே சமாளித்து வருகிறார் இவர் தன்னம்பிக்கைக்கு வழி சேர்க்கும் விதமாக அவருடைய சகோதரி ரேவதியின் முயற்சியாக அங்குள்ள பகுதியில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கோவையில் தன்னம்பிக்கை நாயகனாக வலம் வரும் இந்த சுரேஷ்குமாருகு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.