நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் மீது தற்போது பரபரப்பு புகார் ஒன்றினை தெரிவித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த திரையுலகிலும் அதுதான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. அதாவது நெட் பிளிக்ஸ் தளத்தில் நடிகை நயன்தாராவின் ஆணவ படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் திருமணத்தை ஒட்டி வெளியாக வேண்டிய படம் இரு வருடங்கள் கழித்து வெளியாகிறது. இதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா குற்ற சாட்டு தெரிவித்துள்ள நிலையில் நானும் ரௌடி தான் பாடலுக்கு காபி ரைட்ஸ் கேட்டதோடு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஆணவப்படத்தின் ட்ரெய்லரில் 3 வினாடிகள் இடம்பெற்றதற்காக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், மற்றவர்களின் வளர்ச்சியை தனுஷால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும் நயன்தாரா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் தற்போது திடீரென அஜித்தை பாராட்டியுள்ளார். அதாவது சூட்டிங், கார் ரேஸ், பைக் ரேஸ் எனத்தான் உண்டு தான் வேலை உண்டு என எந்த பஞ்சாயத்துக்கும் போகாமல் நிம்மதியாக வாழும் ஒரே ஒரு ஸ்டார் அஜித் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் நயன்தாரா மற்றும் தனுஷ் பஞ்சாயத்தில் திடீரென அஜித்துக்கு ப்ளூ சட்டை மாறன் புகழாரம் சூட்டியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.