
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை netflix பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக திருமண வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. பியாண்ட் தி பெரி டேல் என்ற பெயரில் உருவாகும் அந்த வீடியோவின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ நிகழ்வு ரிலீஸ் ஆகும் என netflix அறிவித்தது.
நெட்பிளிக்சில் வெளியாகவுள்ள ஆவணப்படத்தில் என் வாழ்க்கையில் முக்கிய படமான நானும் ரவுடிதானே சேர்க்க முடியாமல் போனது மற்றும் அந்த படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு இரண்டு வருடங்களாக உங்கள் பின் அலைந்தோம். ஆனாலும் இறுதிவரை அது நடக்கவில்லை.
அந்த படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் மறுத்தது என் மனதை நொறுக்கியது என நயன்தாரா தனுஷின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நயன்தாராவின் பதிவுக்கு நடிகை ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.