நாடோடிகள் படத்தில் மூலமாக அறிமுகமானவர் அபிநயா.. அந்த படத்தில் சசிகுமாரின் தந்தையாகவும், விஜய் வசந்திற்கு ஜோடியாகவும் நடித்திருப்பார். நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் 15 வருடங்களாக சிறுவயது நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மேலும் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளவதாகவும் கூறியிருந்த நிலையில் அபிநயாக்கு தன்னுடைய நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது. மோதிரம் மாற்றிய  பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)