
மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அமுதன்- சிவஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஆருத்ரா என்ற 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமி கே.கே. நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை அமுதன் ஆருத்ராவை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பள்ளியின் பின்புறம் உள்ள வளாகத்தில் சக குழந்தைகளுடன் ஆருத்ரா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 12 அடி ஆழமுடைய தண்ணீர் தொட்டியில் ஆருத்ரா தவறி விழுந்துள்ளார்.
அதனை பார்த்த மற்ற குழந்தைகள் உடனடியாக ஆசிரியரிடம் சென்று கூறினர். பின்பு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆருத்ராவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்த அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மதுரை மாநகர கமிஷனர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். குழந்தை தண்ணீர் தொட்டியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியை சரியாக மூடாததால் குழந்தை தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
அதனால் பள்ளி மேலாண்மையே சீராக பராமரிக்காததால் அந்த மழலையர் பள்ளிக்கு சீல் வைத்து வைத்தனர். மேலும் பள்ளியின் உரிமத்தை மாவட்ட கல்வி அதிகாரி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.