
டெல்லியில் அகில இந்திய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்வர் தேவேந்திர பாட்னாவிசுடன் சேர்ந்து சரத் பவார் தொடங்கி வைத்தார். அதன் பிறகு சரத் பவா நாற்காலியில் அமர தடுமாறியுள்ளார் உடனே பிரதமர் மோடி அவர் நாற்காலியில் அமர உதவி செய்தார். பின்னர் சரத் பவாருக்கு தண்ணீர் குடிக்க கொடுத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட சாவா திரைப்படம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது என்று கூறினார். மேலும் மேடையில் சரத் பவார் மற்றும் பிரதமர் மோடி இருவரும் அருகில் அமர்ந்திருந்ததால் இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi and NCP chief Sharad Pawar at the inauguration of the 98th Akhil Bharatiya Marathi Sahitya Sammelan.
(Source: DD News) pic.twitter.com/W2TJpqyeqv
— ANI (@ANI) February 21, 2025