தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிப்பட்டினம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக ரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை மதன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து ரமணியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது அதிமுக கட்சியின் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தமிழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். ஒரு குடும்பம் கொள்ளையடிப்பதற்காக தமிழ்நாடு தினம் தினம் சீரழிகிறது.

தாயின் கருவறையை விட புனிதமானதாக கருதப்படும் வகுப்பறையில் ஆசிரியர் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தந்தையும் மகனும் அடுத்தவர்களை விமர்சனம் செய்வதில் காட்டும் ஆர்வத்தை ஆட்சியில் காட்டி இருந்தால் இந்த அவலங்கள் தொடர்ந்திருக்குமா. இது என்னோட ஏரியா என்று சினிமா வசனம் பேசும் Unfit அமைச்சரை உயிரிழந்த ஆசிரியை குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூற அனுப்பினால் இறந்த ஆசிரியர் மீண்டும் உயிருடன் வந்துவிடுவாரா என்று பதிவிட்டுள்ளார்.