சென்னையில் அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஐபிகளிடம் அதாவது தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரிடம் வாங்கிய  பணத்தை கடனாக வழங்கி இருந்தார். இவர் இறந்ததால் அவருடைய சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அவரிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து சொத்தாட்சியர் பணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு கடன் வாங்கியுள்ளனர். இவர்கள் மொத்தம் 10 கோடியே 35 லட்ச ரூபாயை கடனாக பெற்றுள்ளனர்.

இந்த பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுக்காததால் அவர்களை திவால் ஆனவர்களாக அறிவிக்க வேண்டும் என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பிறகு தங்கலான் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் அந்த பணத்தை செலுத்தி விட்டால் படத்தை வெளியிடலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதேபோன்று அடுத்த படமான கங்குவா படத்தையும் வெளியிடுவதற்கு முன்பாக ஒரு கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் படத்தை வெளியிடுவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.