தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு திங்கள்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு இறையாண்மை தங்கப் பத்திரச் சந்தா கிடைக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 12 முதல் 16 வரை இதனை பெற்றுக் கொள்ளலாம். ஒரு கிராமின் வெளியீட்டு விலை ரூ.6,263 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த பத்திரத்தை ஆன்லைனில் வாங்க விரும்புபவர்களுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரூ.6,213க்கு தங்கப் பத்திரம் வாங்கலாம்.

இத்திட்டத்தில் தனிநபர் ஒரு நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4,000 கிராம் வரை வாங்கலாம். தங்க பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். முதிர்வுறும் தேதியின் அன்றைய தேதியின் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்ப தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பின் தங்கப் பத்திரத்தை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.