
இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செய்த நிலையில் அதில் மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. குறிப்பாக தங்கத்தின் விலை ஏழை எளிய மக்கள் எட்ட முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டிக் கொண்டிருந்த சமயத்தில் பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சட்டென மீண்டும் உயர்ந்தது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை சரிவது தற்காலிகமானது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் 60000 ரூபாயை எட்டும் என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை இரட்டிப்பாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.