நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகுதி இல்லாத ரேஷன் கார்டு காரர்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. தகுதியற்ற ரேஷன் கார்டை வைத்திருப்பவர்கள் அரசாங்கத்திடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது உத்திரபிரதேச மாநில அரசு பொது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது ரேஷன் கார்டை ஒப்படைக்க அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு உத்தரமும் வழங்கப்படவில்லை என்றும் எந்த ஒரு ரேஷன் அட்டைதாரரையும் தனது ரேஷன் கார்டை ரத்து செய்யுமாறு மாநில அரசு கேட்டதாக பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளது. ரேஷன் கார்டு ஒப்படைப்பு மற்றும் புதிய தகுதி நிபந்தனைகள் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதனுடன் அரசால் ரேஷனை மீட்டெடுக்க முடியாது என்பதும் தெளிவாகிவிட்டது. எனவே தகுதி இல்லாத ரேஷன் கார்டுகள் ஒப்படைக்குமாறு வெளியான செய்தி முற்றிலும் போலியானது என தற்போது உறுதியாகி உள்ளது.