
தொலைக்காட்சியில் vj வாக பணியாற்றி அதன் பிறகு சீரியலில் பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் மகாலட்சுமி. இவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அடிக்கடி இருவரும் வெளியில் செல்வது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆனால் அண்மையில் ரவீந்தர் தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் சோகமாக ஒரு தலைப்பையும் பதிவிட்டு இருந்தார். இதனால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டதாக செய்தி பரவியது. இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக மகாலட்சுமி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் டேய் புருஷா என்று கூறி அவர் பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க