
நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பலரும் வேலை தேடி அலைந்து வருகிறார்கள். பல வருடங்களாக வேலை தேடும் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் சிலர் திருட்டு வேலையில் ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இளைஞர் ஒருவர் திருடுவதற்காகவே நிறுவனம் நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநில துமகூரு மாவட்டத்தில் சேர்ந்த வெங்கடேஷ் திருட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் மற்றும் இவருடைய கூட்டாளிகள் திருடும் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கேபிள் வயர்களை திருடுவது தான் இவர்களுடைய வேலை. இந்த கேபிள் வயரை திருடுவதற்காக வெங்கடேஷ் மாத சம்பளமாக 20,000 கொடுத்து வந்துள்ளார். இதனை அடுத்து கடந்த வாரம் அருகில் உள்ள கிராமத்தில் கேபிள் வயர்களை திருடிய போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ராகவேந்திராவின் உருவம் பதிவாகியுள்ளது .இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.