இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தனது இந்திய அணிக்காக ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியிலும் இரட்டை சதம் அடிக்க முடியும் என்பதை உலகத்திற்கு முதல் முதலாக செய்து காட்டியவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அதோடு இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் பிசிசிஐ 2024 ஆம் ஆண்டின் சிகேநாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை சச்சின் டெண்டுல்கருக்கு வழங்க இருக்கிறது. மும்பையில் நடக்க இருக்கும் நமன் விருதுகள் நிகழ்ச்சியில் சச்சினுக்கு இந்த விருது வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.