ஐபிஎல் 2025க்கு முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்பாராத முடிவுகளை எடுத்து வருகின்றது. தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஏற்கனவே அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் நீண்ட காலமாக முக்கிய வீரராக இருந்து வரக்கூடிய ரிஷப் பண்ட் அணியை விட்டு விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் பட்டம் வெல்லாததால் அதிருப்தியில் உள்ள டிசி அணியின் நிர்வாகத்தினர் அணியை முழுமையாக மாற்றி அமைக்கும் அமைப்பில் உள்ளனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.