தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தமிழக மக்கள் மட்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து இருந்தால் இந்நேரம் நான் மந்திரியாகி இருப்பேன். தமிழக மக்கள் எங்களை தேர்ந்தெடுக்காததால் தான் மேலிடம் எங்களை ஆளுநராக ஆக்கியுள்ளது. தமிழக மக்கள் தயவு கூர்ந்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களை போன்றவர்கள் நிர்வாக திறமை வாய்ந்தவர்கள். எனவே தமிழக மக்கள் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

இதனை சுட்டிக்காட்டி மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு. வெங்கடேசன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தமிழிசை அவர்களே பரீட்சையில் பெயில் ஆன பிறகும் பிரதமர் பாஸ்போட்டு விட்டார். அப்படி எனில் அது போலிச் சான்றிதழ் தானே. ராஜ் பவன் பெயிலானவர்கள் படிக்கும் டுடோரியல் கல்லூரியாக மாறிவிட்டது என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜ்பவன் டுடோரியல் ஆக இருக்கிறது என எம் பி வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடம் கிடையாது.

அதுவும் புனிதமான கல்வி பயிலும் இடம் தான். டுடோரியல் படித்து அறிவாற்றல் பெற்றவரும் இருக்கிறார்கள். தேர்தல் வெற்றி மட்டும் அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவர்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடம் இல்லை என்பதில் எங்களுக்கு பெருமை. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். எனவே இறுமாப்பு வேண்டாம். ஆளுநர் ஆவதற்கு பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதுபோன்ற தகுதிகளை நீங்கள் பெறப்போவது கிடையாது. மறுபடியும் சொல்கிறேன் இரு மாப்பு வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.