நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் 2024 மார்ச்சுக்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக சென்னையில் 7.5 லட்சம் அட்டைதாரர்களுக்கு இந்த அரிசி வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரும்புச் சத்து, போலிக் அமிலம், விட்டமின் பி12 சேர்க்கப்பட்டதுதான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும். தற்போது இந்த அரிசி அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.