தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.

இந்த நிறுவனத்தினர் முதலீடாக பெறும் பணத்துக்கு வட்டியை சில மாதங்கள் திருப்பி அளித்து, பிறகு முதலீடு பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாகி விடுகின்றனா். இந்நிலையில் தமிழகத்தில் பொருளாதார குற்றவழக்குகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவா்களை கைது செய்ய “ரெட் காா்னா் நோட்டீஸ்” வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.