டி20 கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்..

2023 பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் நேற்று மோதியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி  118 ரன்கள் எடுத்தது. பின் ஆடிய இந்திய மகளிர் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர்  ஸ்டாபானி டெய்லர் மற்றும் கேம்ப்பெல் ஆகியோரை வெளியேற்றினார். கடைசி ஓவரில் அஃபி பிளெட்சரின் விக்கெட்டையும் தீப்தி கைப்பற்றினார். இந்த விக்கெட் மூலம் சரித்திரம் படைத்தார்.

சர்வதேச டி20யில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார் :

தீப்தி ஷர்மாவின் டி20 சர்வதேச போட்டியில் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்துள்ளார். 89வது போட்டியில் விளையாடும் தீப்தி 19.07 சராசரியில் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2016ல் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அறிமுகமானார்.அப்போதிருந்து, அவர் தனது வலது கை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சில் அற்புதங்களைச் செய்து வருகிறார். தனது முதல் போட்டியிலேயே தீப்தி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த ஆட்டமாகும்.

எந்த ஆண் கிரிக்கெட் வீரராலும் முடியவில்லை : 

சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. அவருக்கு முன் எந்த ஆண் வீரரும் இதைச் செய்ய முடியவில்லை. பூனம் யாதவ், பெண்கள் கிரிக்கெட்டில் அவருக்கு முன் அதிகபட்சமாக 98 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

ஆண்களில் யுஸ்வேந்திர சாஹல் 91 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 90 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். 25 வயதான தீப்திக்கு முன், பெண்களில் 8 பந்துவீச்சாளர்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மேற்கிந்திய தீவுகளின் அனிசா முகமது அதிகபட்சமாக 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனைகள் :

அனிசா முகமது (வெஸ்ட் இண்டீஸ்) – 125 விக்கெட்டுகள்

நிடா தார் (பாகிஸ்தான்) – 123 விக்கெட்டுகள்

எல்லிஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா) – 120 விக்கெட்டுகள்

மேகன் ஷட் (ஆஸ்திரேலியா) – 117 விக்கெட்டுகள்

ஷப்னிம் இஸ்மாயில் (தென்னாப்பிரிக்கா) – 117 விக்கெட்டுகள்

கேத்ரின் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கிலாந்து) – 112 விக்கெட்டுகள்

சோஃபி டெவின் (நியூசிலாந்து) – 110 விக்கெட்டுகள்

அன்யா ஷ்ரப்சோல் (இங்கிலாந்து) – 102 விக்கெட்டுகள்

தீப்தி  சர்மா (இந்தியா) – 100 விக்கெட்டுகள்

பூனம் யாதவ் (இந்தியா) – 98 விக்கெட்டுகள்