ஜூன் 2-29 வரை நடைபெற உள்ள டி20 wc தொடரை இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில் ஒவ்வொரு போட்டியின், ஒவ்வொரு பந்தையும் இலவசமாகப் பார்க்கலாம்’ என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, 50 ஓவர் உலகக் கோப்பையை ஹாட்ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பியது.