கோஃபா்ஸ்ட் நிறுவனமானது விமான சேவையை நிறுத்திய பின் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களில் பயண கட்டணம் மிக அதிகளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் “டிக்கெட் விலை நிா்ணயத்தில் மிதமான நடைமுறையை கடைப்படிக்க வேண்டும்” என்று விமான நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

குறைந்த கட்டண விமான சேவையை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்ட கோஃபா்ஸ்ட் நிறுவனமானது நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்கு சென்று உள்ளது. ரூ.11,463 கோடி வரை கடனில் சிக்கி இருக்கும் அந்நிறுவனம், தன் 28 விமானங்களின் இயக்கத்தை கடந்த 3ம் தேதி முதல் நிறுத்தி இருக்கிறது.