
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதன்படி மொத்தம் 688 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இதில் 85 இன்ஜினியரிங் பட்டதாரி பயிற்சி காலியிடங்கள் இருக்கும் நிலையில், மதுரையில் 20 பணியிடங்களும், கும்பகோணத்தில் 35 பணியிடங்களும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 30 பணியிடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இவர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதன் பிறகு 303 technical diploma காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் சென்னையில் 190 இடங்களும், மதுரையில் 51 இடங்களும், கும்பகோணத்தில் 62 இடங்களும் நிரப்பப்பட இருக்கிறது. இவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.8000 ஆகும். அதன் பிறகு பி.பி.எம், பிசிஏ, பிகாம், பிஎஸ்சி மற்றும் பிஏ போன்ற பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் கும்பகோணம் பணிமனையில் உள்ள 300 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ரூ.9000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று ஆகும். இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.