தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, கர்நாடக மாநிலத்தில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 மில்லி லிட்டர் பாட்டிலில் மது விற்கப்படுகிறது. டெட்ரா பேக் மதுவில் கலப்படம் செய்ய முடியாது.

டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் கிடையாது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.