
இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் நடந்ததால் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு போட்டியை நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த வெளிநாட்டு வீரர்கள் போர் பதற்றத்தால் மிகவும் பயந்திருந்ததாக தற்போது வங்கதேச வீரர் ரிஷாத் ஹுசைன் கூறியுள்ளார். இது பற்றி. அவர் கூறியதாவது, டாம் கரண், டேவிட் வைஸ், குஷால் பெரேரா, டேரில் மிச்சல், சாம் பில்லிங்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மிகவும் பயந்த நிலையில் துபாயில் தரையிறங்கிய மிட்செல் இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டேன் என தன்னிடம் சொன்னதாக கூறினார்.
குறிப்பாக இதுபோன்ற சூழ்நிலையில் அனைத்து வீரர்களுமே பதற்றம் அடைந்தனர். நாங்கள் ஏர்போர்ட் சென்ற போது விமான நிலையம் மூடப்பட்டிருந்ததால் டாம் கரண் மிகவும் அழுதுவிட்டார். மேலும் அவரை சமாதானம் செய்வதற்கே இரண்டு மூன்று பேர் தேவைப்பட்டனர் என்று கூறினார்.