கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்லாரி மாவட்டத்தில் சுனில் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டாக்டர். இவர் கடந்த சனிக்கிழமை காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவ்ழழியாக காரில் வந்த சில மர்ம நபர்கள் சுனிலை வலுக்கட்டாயமாக கடத்திவிட்டு சென்றனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதே நாளில் சுனிலின் சகோதரரான வேணுகோபாலுக்கு whatsappபில் கடத்தல் காரர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர். இதில் வேணுகோபால் மது வியாபாரி. அந்த மெசேஜில் உங்கள் அண்ணனை பத்திரமாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் 6 கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அதுபோக 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தையும் கேட்டுள்ளனர். இது பற்றி வேணுகோபால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணையை துரிதப்படுத்தியதோடு கடத்தல்காரர்கள் தப்பி செல்லாமல் இருக்க தீவிர வாகன சோதனை உட்படுத்தப்பட்டது. இதனால் பயந்து போன கடத்தல்காரர்கள் சுனிலை விடுவித்தனர். அதோடு அவருடைய செலவுக்காக 300 ரூபாய் பணமும் கொடுத்துள்ளனர். இதில் வேணுகோபால் மது வியாபாரம் செய்து வருவதால் தொழில் தொடர்பான பிரச்சனையில் அவருடைய அண்ணன் சுனில் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வேணுகோபால் மாவட்ட மது விற்பனை சங்க தலைவராகவும் இருப்பதால் இந்த கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.