
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள ஸ்டேடன் தீவிலுள்ள சிறப்பு பால்ய சிறைமனையில் நடந்த கோர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 21 வயதான ஒருவர், தனது சிறுவயதில், தன்னை 30 முறைக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக மாயா ஹேய்ஸ் என்ற முன்னாள் ஆலோசகர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மாயா ஹேய்ஸ், 2021ஆம் ஆண்டு ப்ரூக்க்வுட் யூத் ஃபேசிலிட்டி எனும் சிறைமனையில் உளவியல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். அந்த நேரத்தில் 17 வயதான அந்த இளைஞருக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கியபோதே இந்த நிகழ்வுகள் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
மூன்று மாதங்கள் கழித்து, மாயா ஹேய்ஸ், சிகிச்சை என்ற பெயரில் பாலியல் தொடர்பு கொள்வதைத் தொடங்கியதாகவும், இது தொடர்ந்து பலமுறை நடந்ததாகவும் அந்த இளைஞர் தனது வழக்கில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஆலோசகர் தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த இளைஞரை தன்னம்பிக்கையுடன் நடத்த, தனது செயல்களை “தெரபி” என நம்பச் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர், அந்த இளைஞரை “க்ரூமிங்” செய்து, அவரின் நிலையைப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறைமனையின் பணியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்றும், சிலர் இளைஞரிடம் “நீங்க Big Foot-உடன் ஏதாவது பண்றீங்களா?” என கேலி செய்ததாகவும், அந்த ஆலோசகரை “Big Foot” எனக் குறிப்பிட்டதாகவும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாயா ஹேய்ஸ் அந்த இளைஞரின் பெற்றோரிடம் “உங்கள் மகனுக்காக உணவு மற்றும் சுகாதார பொருட்கள் வாங்க வேண்டும் என கூறி ₹100 அமெரிக்க டாலர் கேஷ்அப் வழியாக பெற்றதாகவும் புகார் உள்ளது. இந்த புகாரின் படி 47 வயதான மாயா ஹேய்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, 65 குற்றச்சாட்டுகளில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தற்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இளைஞர் சிறைமனையின் மற்ற ஊழியர்களையும் எதிர்த்து சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.