நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டு 5 நாட்கள் ஆன நிலையில் 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள் இன்று(மே 09) அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி, பல முக்கிய தடயங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.