நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தகுதி உள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக இந்த தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிதி உதவியை பெற இ கேஒய்சி பதிவு செய்ய வேண்டும்.

இதற்கான அவகாசம் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விவரங்களை உடனே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இ கேஒய்சி பதிவு செய்யாதவர்களுக்கு 18வது தவணை பணம் கிடைக்காது என கூறப்பட்டுள்ளது.