ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹீகா ஷர்மாவுடன் விமான நிலையத்தில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நாளை சனிக்கிழமை (மே 2) சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி சென்னைக்குப் புறப்பட்டது. அப்போது மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையின் போது, ஹர்திக் பாண்டியா தனது காதலி மஹீகா ஷர்மாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு மிகவும் நெருக்கமாக அணைத்தபடி நின்றிருந்தார்.
கடந்த புதன்கிழமை வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி படுதோல்வி அடைந்த போதிலும், பாண்டியா எவ்வித கவலையுமின்றி மிகவும் நிதானமாகவும், காதலியுடன் பொழுதைக் கழிப்பதிலும் ஆர்வமாக இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
View this post on Instagram
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையில், கேப்டனின் கவனம் கிரிக்கெட்டில் இல்லை என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இவரை மைதானத்தில் பார்ப்பதை விட இதுபோன்ற இடங்களில்தான் அதிகம் பார்க்க முடிகிறது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் இவரை உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் இவரை அணியை விட்டு வெளியேற்றுங்கள். இவருக்குக் கிரிக்கெட் மீது அக்கறை இல்லை காதலி மீதுதான் அக்கறை இருக்கிறது என ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால், சென்னையில் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், கேப்டனின் இந்த வைரல் வீடியோ மும்பை ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
