புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வந்தது. இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அங்கு கடை வைத்திருந்த ஒரு முதியவரிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.

வாக்குவாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அந்தக் காவலர், முதியவர் வைத்திருந்த தள்ளுவண்டி கடையை ஓங்கி எட்டி உதைத்து கீழே தள்ளினார். இதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி நாசமானது. முதியவர் கண் முன்னே தனது வாழ்வாதாரம் சீரழிக்கப்படுவதைக் கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.

“>

இந்த அராஜகச் செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிய திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.