வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வடகொரியா பாலிஸ்டிக்  ஏவுகணை ஒன்றை ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்கு கடலில் வீசியதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

தென்கொரியா மற்றும் வடகொரியா இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாஷிங்டன் மற்றும் சியோல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இருக்கும் சூழலில் தான் இந்த ஏவுதல் நடந்துள்ளதாக ஜப்பான் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். வடகொரியா ஏவிய ஏவுகணையின் வகையை தென்கொரியா ராணுவம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.