பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணிஅபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.  RCB அணிக்கு எதிரான 68ஆவது போட்டியில், 3 விக்கெட்டுகள் (27 ரன்கள்) வித்தியாசத்தில் தோற்ற CSK அணி ப்ளே ஆஃப்-க்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் CSK களமிறங்கியது. ஜடேஜா – தோனி ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் ஏறியதால், வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட CSK அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்று, தொடரில் இருந்து வெளியேறியது.