ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டம் சர்வானா காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் ஹனுமான்ராம் என்பவர், ஒரு பெண்ணுடன் காரில் ஆபாசமாக இருந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ கடந்த 3 முதல் 4 நாட்களுக்கு முந்தையதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாலோர் மாவட்டம் குடமலானி பகுதியில் உள்ள ஒரு கிராம மக்கள், சாலையோரத்தில் காரில் பெண்ணுடன் தவறான நிலையில் இருந்த காவலரை கண்டு, அவரது செயல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வெளியானதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சர்வானா காவல் நிலையத்தில் பணியாற்றிய ஹனுமான்ராம் என்பவரை இடைநீக்கம் செய்துள்ளார்.

 

மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.