உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பவன்பூர் பகுதியில் தீபாவளி அன்று ஒரு சிறுமி கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின்தொடர்ந்து வந்த நபர் திடீரென அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். மேலும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் அச்சத்தில் அந்த சிறுமி கூச்சலிட்டதால் அந்த நபர் என்ன செய்வது என்று அறியாமல் யோசித்தார்.

அப்போது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.