ஏராளமானோர் பானிபூரி விரும்பி சாப்பிடுகின்றனர் இந்த நிலையில் பானிபூரி சுவையை கூடுதலாக வறுத்து எலும்புகளை சேர்த்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. தாய்லாந்தை சேர்ந்த சமையல் கலைஞர்கள் இந்திய தயாரிப்பு பானி பூரியை தங்கள் பாரம்பரியம் கலந்து தயாரித்து புதுமைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதற்காக பானிபூரி கலவையுடன் கூடுதலாக கொட்டும் சிவப்பு எறும்புகளை வறுத்து பூரி மேலாக அலங்கரித்து சாப்பிட கொடுத்துள்ளார்கள்.

அந்த சிவப்பு எறும்புகளை சத்தீஸ்கரில் இருந்து வரவழைத்ததாக கூறியுள்ளனர். இதனை பார்த்த இந்திய பானி பூரி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த பானி பூரிக்கு தாய்லாந்து உணவு பிரியர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினரின் உணவு பழக்கவழக்கத்தில் சிவப்பு எறும்புகளை அதிகமாக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Varun Totlani (@varuntotlani)