
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில் தொடர்ந்து பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார்.
இவர் 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏஆர் ரகுமானிடம் ஆஸ்கார் விருது வழங்கும் விழா பற்றி கேட்கப்பட்டது.

அதாவது அந்த விழாவில் இந்திய திரைப்படங்கள் கையாளும் விதம் பற்றி கேட்கப்பட்ட நிலையில் அவர் சொன்ன தகவல் தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விருது வழங்கும் தேர்வுக் குழுவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசமாகிய நாடுகளில் இருந்து வரும் படங்களை நிறைவேறியோடு தான் பார்ப்பார்கள்.
இவர்களிடம் சோற்றுக்கே வழியில்லை, கழிவறைகள் இல்லை. இவங்க படத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்களா என்ற எண்ணம் இருக்கும். அதை மீறி நாம் படம் இயக்கும்போது கண்டிப்பாக இதை எப்படி செய்தீர்கள் என்ற எண்ணத்தை அவர்களது மனதில் உருவாக்க முடியும். அப்படி ஒரு அனுபவத்தையும் தருணத்தையும் உருவாக்கியது தான் ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
மேலும் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது வழங்கும்போது நான் அங்குதான் இருந்தேன் என்று கூறினார்.