உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சௌரப் ராஜ்புத் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் முஸ்கான் ரஸ்தோகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 6 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதில் சௌராப் லண்டனில் வேலை பார்க்கும் நிலையில் விடுமுறையில் தன்னுடைய மனைவி மற்றும் மகளை பார்ப்பதற்காக அடிக்கடி ஊருக்கு வந்துள்ளார். இதில் முஸ்கான் சாஹல் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் இந்த விவகாரம் அவருடைய கணவருக்கு தெரிய வந்து தன் மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் தன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்த நிலையில் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் காரணமாக அந்த முடிவினை கைவிட்டு தன் மனைவியை அவர் மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும் முஸ்கான் தொடர்ந்து சாஹலுடன் கள்ள உறவில் இருந்த நிலையில் இந்த விவகாரம் சௌரப்புக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் தன் மனைவியிடம் கேட்டு தகராறு செய்ததால் கோபத்தில் தன் காதலனுடன் சேர்ந்து முஸ்கான் தன் கணவனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் உடலை 15 துண்டுகளாக வெட்டி ஒரு சிமெண்ட் பூசிய ட்ரம்மில் வைத்து மூடி வைத்தார். இது தொடர்பாக முஸ்கான் குடும்பத்தினர் கடந்த 18ஆம் தேதி போலீசுக்கு புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சௌரப் சடலத்தை மீட்டதோடு மார்ச் 19ஆம் தேதி முஸ்கான் மற்றும் அவருடைய காதலனை கைது செய்தனர்.

இதில் முஸ்கான் மற்றும் அவருடைய காதலர் இருவரும் போதைக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் தற்போது சாஹலை அவருடைய பாட்டி ஜெயிலில் சென்று சந்தித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவருடைய பாட்டி சாஹலின் அம்மா 17 வருடங்களுக்கு முன்பாக சிறுநீரக பிரச்சனை காரணமாக இறந்துவிட்ட நிலையில் பின்னர் தன் மகனை பார்த்துக் கொள்ளும்படி என்னிடம் இறப்பதற்கு முன்பாக கேட்டார். எனக்கு சாஹல் தற்போது சிறையில் இருப்பதை விட சௌரப் கொல்லப்பட்டது தான் மிகவும் வலியை கொடுக்கிறது. இந்த கொலையில் என் பேரனை முஸ்கான் தான் சித்த வைத்திருப்பார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறினார். மேலும் தனக்கென தன சொந்தமாக ஒரு வீடு கூட இல்லாத நிலையில் ஒவ்வொரு வீடாக தற்போது இடமாற்றம் செய்து தங்கி உள்ளதாக வேதனையுடன் கூறினார்.