அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பெற, திருமணமான பெண் ஒருவர் தனது சகோதரனை மீண்டும் திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்சில் நடந்த சமூக திருமணத்தில் 38 ஜோடிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுமணத் தம்பதிகளுக்கு அரசிடம் இருந்து பரிசுகள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

லட்சுமிபூர் தொகுதியின் அதிகாரி (பிடிஓ) அமித் மிஸ்ரா கூறுகையில், இந்த சம்பவம் சர்ச்சையானதை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி தம்பதிகளுக்கு அனுமதிக்கப்படாது என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.