
ஜெகன் மண்டபத்தில் உள்ள குண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் தமிழ்நாட்டில் இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த நம்பர் மாதம் 24 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜோர்டாக் கிராமத்தில் ஒரு தெரு நாய் மனித உடல் உறுப்புகளை வாயில் கவியபடி ஓடியது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது அது பெண்ணின் உடல் என்பது உறுதியானது. அந்த பெண்ணுடன் நெருக்கமாக பழகிய நரேஷை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நரேஷ் தனது காதலியிடம் சொல்லாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.
ஜார்கண்டில் தனது மனைவியை விட்டுவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் நரேஷிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் கடந்த நவம்பர் எட்டாம் தேதி நரேஷ் தனது காதலியை ஜார்கண்ட மாநிலத்திற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். பின்னர் காதலியின் துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதனை தொடர்ந்து அவரது உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி வனவிலங்குகள் சாப்பிடும் வகையில் வீசிவிட்டார். அதன் பிறகு ஒன்றும் தெரியாதது போல தனது அன்றாட வேலைகளை பார்த்தது தெரியவந்தது.