இந்தியாவில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பு தொழிலை தொடங்க அரசு 60 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. இது தவிர மற்ற விவசாயிகளுக்கு 40% வரை மானியம் வழங்குகிறது. இந்த தொழிலில் குறைந்த அளவு செலவு மற்றும் அதிக அளவு லாபம் என்பதால் விருப்பமுள்ளவர்கள் அரசின் மானியம் பற்றி மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கலாம்.

இதற்கு அரசு இலவச பயிற்சியும் வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள மத்திய அரசின் அதிகாரப் பூர்வ இணையதளமான https://dof.gov.in.pmmsy என்ற முகவரிக்குள் சென்று பார்க்கலாம். இந்நிலையில் மீன் வளர்ப்புக்கு 20,000 கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டி அல்லது குளத்தை உருவாக்க வேண்டும். இதற்கு சுமார் 20 லட்சம் வரை செலவாகும். குளம் அமைப்பதற்கு நபார்டு வங்கி 60% வரை மானியம் வழங்குகிறது. குளம் அமைத்த பிறகு மீன்கள் மற்றும் அவற்றின் விதைகளை பராமரிப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். மேலும் இந்த தொழிலில் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்பதால் தொழில் தொடங்கிய ஓரிரு ஆண்டுகளில் உங்களுடைய வருமானமும் அதிகரிக்க ஆரம்பித்து விடும்.