
தெலுங்கானா குடகு பகுதியில் உள்ள காபி எஸ்டேட் ஒன்றில் தொழிலதிபர் ரமேஷ் என்பவரது சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில் ரமேசின் இரண்டாவது மனைவியான நிஹாரிகாவை கைது செய்துள்ளனர்.
மேலும் நிஹாரிகாவின் நண்பர்களான நிகில் மற்றும் அன்கூர் ராணா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை தனது பெயரில் மாற்றி தராத ஆத்திரத்தில் ரமேஷின் கழுத்தை நெறித்து நிஹாரிக்கா கொலை செய்ததையும் அதனைத் தொடர்ந்து சடலத்தை நண்பர்களின் உதவியுடன் 840 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று எரித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.