
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தீத்வானா மாவட்டத்தில் குச்சம் நகர் உள்ளது. இங்கு சாலையில் ஒரு மின்சார வாகனம் திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. அந்த ஸ்வாகனத்தை மாட்டு வண்டி ஒன்று சாலையில் இழுத்துச் சென்று மெக்கானிக் ஷாப் வரை செல்கிறது. அதாவது கார் திடீரென நடுரோட்டில் பழுதாகி நின்ற நிலையில் அதனை எடுக்க முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே உடனடியாக மாட்டு வண்டியை வரவழைத்து கயிறு கட்டி காரை இழுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இது பற்றி அந்த கார் உரிமையாளர் அணில் சிங் மெட்டியா கூறும்போது, நான் ரொம்ப ஆசையாக அந்த வாகனத்தை வாங்கினேன். ஆனால் வருடத்திற்கு 16 முறை பழுதாகி மெக்கானிக் ஷாப் செல்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆதி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
राजस्थान : नेता प्रतिपक्ष अनिल सिंह मेड़तिया की इलेक्ट्रॉनिक कार ने जब धोखा दिया तो बैलों ने मोर्चा संभाला। नेताजी की कार बैलों से खिंचवाई। ये कार 1 साल में 16 बार सर्विस सेंटर पर जा चुकी है। आज फुल चार्ज होने के बावजूद बार–बार बंद हो रही थी। pic.twitter.com/UaewWN01oG
— Sachin Gupta (@SachinGuptaUP) December 29, 2024