இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு சைபர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக Android 12, 12L, 13 மற்றும் Android 14 க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஃபோன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.