வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்துவமான தேசிய அழைப்பு எண்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முயற்சியை ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மத்திய அரசு ஒருங்கிணைத்து திட்டமிட்டு வருகிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் பெறும் ஓடிடி, ஏல்ஓசி, வங்கி அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனைத்தும் பல்வேறு எண்களில் வருவதால் மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி, அதனைக் கேட்கும் வாயிலாக மோசடிக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு வங்கிக்கும் “1600xx” வரிசையில் தொடங்கும் தேசிய அழைப்பு எண்கள் வழங்கப்படும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அழைப்பை பெறும் போதே, அது எந்த வங்கியிடமிருந்து என தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

இது தொடர்பாக ஒரு வங்கி அதிகாரி கூறுகையில், “இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பும், நம்பிக்கையும் தரும். தனித்துவமான அழைப்பு எண்களுக்கு இன்கமிங் வசதியும் சேர்க்கப்படும்” என்று தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் குறித்து வங்கிகள், அரசு மற்றும் RBI இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கி மோசடிகளை தடுக்கும் முன்னோடியான நடவடிக்கையாகும் என வங்கித் துறையில் உறுதியாகக் கூறப்படுகிறது.