
சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் காலை சிலர் பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.